ஆ: அதுமட்டுமல்ல! ஒரு பெண் உடல்ரீதியாக சோர்வின்றி, உடல் வலியின்றி எத்தனை ஆண்களை வேண்டுமானாலும், எந்த நிலையில் வேண்டுமென்றாலும் சமாளிப்பாள் என்பது போன்றும், பெண்ணின் பாலியல் உணர்ச்சியின் மதிப்பை அளவிடமுடியாததாகவும் காட்டுகிறார்கள். பெரும்பாலான படங்களில் புணர்ச்சி சோர்ந்த பெண்ணை காட்டுவதில்லை. ஆனால், ஆண்கள் அவ்வாறு காட்டப்படுகிறார்கள். ஏனெனில், பார்க்கும் ஆணிற்கு தனது சுய யதார்த்தம் புரியும் என்பதால் மிகைப்படுதுதல்கள் இருப்பதில்லை. ஒரு பெண் பாலியல் உணர்வுக்கு ஆட்பட்டவுடன் எந்தவித செயலுக்கும் தயாராகி விடுகிறாள். சிலவேளைகள் ரோலிங் சீ்ப்பகள், சாம்பு பாட்டில்கள் அல்லது மது பாட்டில்கள், கத்தியின் கைப்பிடி, மாடிப்படிகளின் கைப்பிடியாக உள்ள பைப்புகள், காரட் போன்ற உணவுப்பொருள்கள் இப்படி பலவற்றையம் பயன்படுத்துவதும் உரசிக்கொள்வதும் காட்டப்படுகிறது. இதில் அதிர்வுகள் ஏற்படுத்தும் இயக்கிகள் (வைபரேட்டார்கள்) மற்றும் பொம்மைகள் ஆகியவற்றின் பங்குகள் சந்தை முக்கியத்துவத்துடன் பல வகைமாதிரிகள் தொழில் நுட்பங்களுடன் காட்டப்படுகின்றன. உணர்ச்சிகளின் அவஸ்தைகளை காட்ட பெண்ணையே காட்டுவதும் ஏதொ பெண் அதீத பாலியல் வேட்கை அதாவது காம வேட்கை உள்ளவளைப் போலத்தானே அர்த்தமாகும். இது பெண் மீதான பயத்தை அதிகரிப்பதன்மூலம், அவள்மீதான கண்காணிப்பை அதிகப்படுத்த ஆணிண் தன்னகங்காரத்தை தூண்டுவதாக அமைகிறது.
இ: அப்படியானால்! பெண்ணிற்கு அதீத பாலியல் வேட்கை இல்லை என்கிறீர்களா? ஒப்பீட்டளவில் ஆணைவிட பெண்ணிற்கு பாலியல் உணர்ச்சி அதிகம்தானே?
ஈ: உண்மைதான்! அதற்கு பல வரலாற்றுச் சமூகக்காரணங்கள் இருக்கிறது. என்றாலும் இப்படங்கள் காட்டும் அளவிற்கு பெண்ணிற்கு பாலியல் ஆற்றல் அதீதமாக உள்ளதா? என்பது கேள்விக்குரிய விஷயமே. இது பற்றி பெண்ணிலையிலான உரையாடல்கள் இல்லை அல்லது நாம் அவற்றை அறிந்ததில்லை என்பதால் பாலியல் ஆய்வாளாகள் மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன் தம்பதியினரின் முடிவுகள் சிலவற்றை இங்கு பேசுவது பயனுடையதாக இருக்கும்.
1. ஆண்/பெண் எழுச்சி உச்சத்தில் (orgasm) நேரவித்தியாசம் இருக்கிறது. ஒரு ஆணிற்கு எழுச்சி திடீரென உயர்ந்து திடீரென தாழ்ந்து விடுகிறது. ஆனால், பெண்ணிற்கு சீராக உயர்ந்து உச்சப்புள்ளியை அடைந்து பின் சீராக தாழ்கிறது. ஒரு பெண நான்கு ஐந்து முறைகளுக்கும் மேலாக உச்ச எழுச்சியை அடையலாம். ஒரு உச்ச எழுச்சியை அடைவதற்குள் பெண்ணின் எழுச்சி இரண்டு மூன்று முகடுகளாக உயர்ந்து உச்சமுகடை தொடுகிறது. பெரும்பாலான பெண்கள் இந்த முதல் முகடுகளையே உச்சமாக கருதிக்கொள்கிறார்கள். ஆணிற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை மட்டுமே உச்ச எழுச்சி நடைபெறும்- அதாவது ஆற்றல் வெளிப்பாடு நடைபெறுகிறது. அவை ஒவ்வொன்றிற்கும் பின்பும் எடுத்துக்கொள்ளும் நேரமும், வெளிப்படும் ஆற்றலால் அடையும் சோர்வும் ஆணின் எழுச்சியில் ஒரு சீரற்ற தன்மையை உருவாக்கிறது. இரண்டு உச்சங்கயை அடைய ஆணிற்கு ஏற்படும் செல்களின் மறுஉற்பத்திக்கான நேரம் பெண்ணிற்கு இல்லை.
2. ஒரு பெண்ணின் பாலியல் உணர்வுமையமாக விளங்கும் 'கிளிட்டோரிஸ்' எனப்படும் 'கந்து'-வின் உராய்வே பெண்ணின் எழுச்சிக்கும் உச்சத்திற்கும் அடிப்படை. இவ்வுறுப்பு உடலியல்ரீதியாக வேறு எந்தவித செயலுக்காகவும் இல்லை. பாலியல் உணர்ச்சிக்கான உச்சத்தை தருவதைத் தவிர. இக் கந்துவை கையாள்வதில்தான் ஒரு பெண்ணின் உச்சப் புணர்ச்சி நிறைவு உருவாக்கப்படுகிறது. இது பெண்குறிக்குள் ஒரு சிறிய ஆண்குறிவடிவில் இருக்கும் ஒரு உடலுறுப்பு ஆகும். இது நுண்நரம்புகளுடன் இணைந்திருப்பதால் இது உணர்ச்சிப்பொட்டுகளை கொண்டதாக உள்ளது.
இங்கு இதன் பாலியல் அரசியலைப் புரிந்து கொள்வது நல்லது. ஆதிப் பழங்குடிகளின் தந்தைவழிச் சமூக உருவாக்கங்களின்போது இந்த கந்துப் பகுதியின் முனைகளை வெட்டியும், தீய்த்து கருக்கியும் பெண்ணின் பாலியல ஆற்றலை ஒடுக்கும் அதிகாரத்தை ஒரு சடங்காக செய்து வந்துள்ளனர். அதற்கான அதிகாரத்தை இனக்குழுத்தலமை பெற்றிருந்தது. அது ஒரு சடங்காக இன உறுப்பினர்களால் பின்பற்று வந்தது. பெண் கன்னித்தன்மை அடையும்போது அதாவது இனப்பெருக்கத்திற்கு தயாராகும்போது அவளது கன்னிததிரையை கிழிக்கும் மூங்கில் கம்புகள் ஆகியன புணிதச் சடங்கு ஆயுதங்களாக பயனபட்டு வந்தன என்று மானுடவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இன்றும்கூட பல ஆப்பரிக்க நாடுகளில் குறிப்பாக சூடான் எகிப்து போன்ற நாடுகளில் இச்சடங்கு நடைமுறையில் உள்ளது.
3. மாஸ்டர் ஜானசன் தம்பதியினர் பலவித வயது வித்தியாசம் உள்ள 700 ஆண் பெண் ஆய்வு மாதிரிகளை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து அவர்கள் குறி பற்றிய ஆண்களிடமும் பெண்களிடமும் பல தவறான கண்ணோட்டங்கள் நிலுவுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இன்றுவரை பொதுப்புத்தியில் இக்கருத்தின் ஆதிக்கம் கண்கூடு.
இதைக் கூறக்காரணம் நீலப்படங்களில் காட்டப்படும் ஆண்குறிகள் எல்லாம் பிரம்மாண்டமாக பெரிது படுத்திக் கர்டப்படுகிறது. குறிப்பாக கருப்பின நீக்ரோக்களின் பிரம்மாண்டமான குறிகளுடன் காட்டுவதும் அவர்களை வெள்ளை நிறப் பெண்கள் விரும்புவதான ஒரு கருத்தியல் கட்டமைப்பும் இதனால் உருவாக்கப்படுகிறது. இப்படிக் காட்டப்படுவதில் ஒருவகை கருப்பின வெறுப்பும் கருப்பினத்தின் மீதான பயமும் வெள்ளை மற்றும் பிற இனத்தினரின்மீது கட்டமைக்கப்படுகிறது. இது ஒருவகை இனவாதப்பாலியலை (racial sexuality) உருவாக்குகிறது. இப்படங்களில் குறிப்பாய் ஆண்குறிகள் மட்டுமே பிரம்மாண்டப்படுத்திக் காட்டப்படுகிறது. பெண்குறிகளை பிரம்மாண்டபடுத்துவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
4. ஆண் குறியின் நீளம், தடிமன் பெண் குறியின் ஆழம், இறுக்கம் ஆகியவற்றிற்கும் புணர்ச்சி உச்சத்திற்கும் எநதவித சம்பந்தமுமில்லை என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். மிகச்சிறிய ஆண்குறியுடையவர்களால்கூட ஒரு பெண்ணை முழு நிறைவுக்கு கொண்டு செல்ல இயலும் என்றும் அதற்கு புணர்ச்சி நுட்பம் பற்றியும், கையாளும் திறன் பற்றியும் அறிவு போதுமானது என்றும், புணர்ச்சிக்கு முன்பான புறவிளையாட்டுகளில் (fore-plays) கவனம் செலுத்தி ஒரு பெண்ணை சிறிது, சிறிதாக உச்ச எழுச்சிக்கு அழைத்துச் செல்வது தொழில் நுட்பம் சார்ந்தவைதான் என்றும் கூறியுள்ளனர். (இதுகுறித்து மற்றொரு பதிவில் விவாதிக்கப்பட்டுள்ளது.)
எனவே, பெண்ணிற்கு மட்டுமே பாலியல் அதீத அற்றல் இருப்பதாக கூறமுடியாது. ஆற்றல் மட்டங்களில் ஒரு வித்தியாசமான உடற்கூறு பெண்ணுக்கு இருப்பினும் கட்டுப்பாட்டு உணர்வுடன் கையாளும் ஆண்களுக்கு பெண்ணின் பாலியல் ஆற்றல் பிரச்சனைக்குரிய விஷயமில்லை. குறிப்பாய் பாலியல் ஒடுக்குதலுக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதற்கு ஆணின் புணர்ச்சியில் நுழையும் 'தான்' பற்றிய ஆணாதிக்கத் தன்னுணர்வு ஒரு காரணம். பெண் பாலியல் உணர்வு பற்றிய அக்கறையற்ற ஆண்களின் வேட்கை தணிப்பின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ஒரு உண்மையை இங்கு சுட்டலாம். பம்பாயில் பாலியல் பற்றி ஆய்வு செய்யும் ஒரு ஆய்வு நிறுவனம் சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தோராயமாக 80% சதவீதத்திற்கு மேலான இந்தியப் பெண்களுக்கு உச்சகட்டம் (orgasm) பற்றிய கருத்தோ, அனுபவமோ இல்லை என்று கள ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாலியல் நிறைவின்மை பெண்களின் நுட்பமான மன உணர்வுகளை கடுமையாக பாதிக்கிறது. பலர் மனநோய்களுக்கும், மனப்பிறழ்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். மலர்ச்சியுள்ள மனித உறகளின் பண்புகளற்று, அகங்காரம், கவர்ச்சி மோகம், அர்த்தமற்ற கோபம், புரிதலின்மை, தேவையற்றவற்றில் பொழுதை போக்கும் மனநிலை போன்ற பல நடைமுறை செயல்பாடுகளாக அவை வெளிப்படுகின்றன என்றும் கூறியுள்ளனர். ஒரு பெண்ணின் ஆற்றல் முறையாகவும், முழுமையானதாகவும் பயன்படுத்தப்படாததால் பலவித மன இறுக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கி, அவர்களை புரிந்துகொள்ள முடியாத சிக்கலான குழப்பக் கடலுக்குள் தள்ளிவிடுகிறது. அவர்களது மன உணர்வுகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாத உளவியல் மெளனம் நிலவுகிறது. பெண்கள் புரிந்து கொள்ளமுடியாத ஆழமான மனதை உடையவர்கள் என வழங்கும் வழக்குச்சொல் கவனத்திற்குரியது. எனவே, பெண்ணின் பாலியல் ஆற்றல் கையாளும் திறனுக்கு அப்பாற்பட்டதாக கருதமுடியாது.
(உரையாடல் தொடரும்)
படம்: மாஸ்டார்ஸ் அண்ட் ஜான்சன்







6 Comments:
ஜமாலன்,
பயனுள்ள தொடராக அமையுமென்று நம்புகிறேன்.
இக்க்கட்டுரையின் இப்பகுதியின் பெரும்பாலான கருத்துகளுடனே ஒப்புதலுண்டெனினும், இக்கட்டுரை எண்பதுகளிலே எழுதப்பட்ட கட்டுரை போன்று உணர்வதினைத் தடுக்கமுடியவில்லை. நீங்கள் சுட்டும் மாஸ்ரர்ஸ் & ஜோன்ஸனின் ஆய்வு முடிவுகளிலே சில (உச்சநிலை(கள்) ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் எண்ணிக்கை, ஏற்றவிறக்கநிலை என்பன பற்றி) தொண்ணூறுகளின் ஆய்வுகள் சிலவற்றிலே தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதென்று ஒரு கட்டுரை சில ஆண்டுகளின் முன்னே வாசிக்கக்கிட்டியது.
1. உடல் அரசியல் ஆண்கள்-பெண்கள் என்ற கறுப்பு-வெள்ளை யிங்-யாங்கிற்கு அப்பாலே நகர்ந்து இருபாலியர், ஆண்-ஆண், பெண்-பெண், ஆணுடலுள்ளே பெண், பெண் உடலுள்ளே ஆண் என்ற பரிணாமத்துப்பரிமாணங்கள் விரிந்த நிலையிலும்,
2. ஆண் சந்தைக்கான நீலப்படங்கள் என்ற கட்டம் தாண்டிய நிலையிலும் (முழுமையாக அல்ல என்பதனை நிச்சயமாக ஒத்துக்கொள்ளவேண்டும்),
3. பெண்கள் தங்கள் உடல்களைக் குறித்த மொழியினையும் கட்டுப்பாட்டினையும் ஆட்சிப்படுத்துமளவு பெருகும் நேரத்திலும்
4. ஆணுடல் & பாலியல் குறித்த பெண்களின் ஆண் வழிப்படுத்தாத பார்வையும் கவனமும் கணிசமானவளவு வேர்விட்டிருக்கும் நேரத்திலும்
நீலப்படங்கள் குறித்த ஒரு தளப்பார்வை எத்துணை வெற்றியளிக்கும்?
பெண்களுக்கான ஆண்_ஆடையவிழ்ப்பு_நடனம்(!) தொடக்கம் பெண் மையப்படுத்தப்படும் நீலப்படங்களினாலே ஆண்களின் மீதான பெண்(நடிகை)களின் பிடி/வெற்றியேற்படுகின்றதென்று செவ்வி கொடுக்கும் நீலப்படநடிகைகள்வரை உதாரணம், கடந்த சில பத்தாண்டுகளாகப் பார்வைகள் விரிந்தோ வேறாகியோ எண்ணிக்கை பெருகியோவிருக்கின்றன என்று சுட்டலாம்.
அண்மையிலே பெண் என்பதனை வைத்து ஆணை வெல்லுதல் என்பதைப் பற்றி வெற்றிகரமான தொழிலதிபராகவிருந்த ஒரு பெண் எழுதிய புத்தகம் வேறு வந்திருக்கின்றது.
நீலப்படங்கள் சரியென்றோ தேவையென்றோ நிறுவ நான் முயலவில்லை (சில அதீதமான உறவுநிலைநெறி பிறழ்த்தும் நீலப்படங்கள் தவிர்த்த மற்றைய நீலப்படங்களின் இருப்பு, பாலியலளவிலே சமூகவமைப்பிலே ஒடுக்கப்படும் தனியாளின் பாலியல்சார் உணர்வுநிலைக்கோளாறுகளைக் குறைக்க உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து). ஆனால், காமசூத்திராவைக் கொண்டாடுகிற, நான்கு மனைவிகளை அனுமதிக்கின்ற, காமத்தினைப் பாம்பாக்கி நச்சுநிலை சுட்டுகிற சமூகநெறிக்கோவைக்கு நீலப்படங்களின் "சுதந்திரம்" ஏதும் மேலான கெடுதலில்லை.
ஜமாலன், இந்தப் பகுதி, சிக்கலான ஒரு விஷயத்தை அரசியல், உளவியல், பொருளாதார காரணிகளுடன் உரையாடுகிறது.
உறுப்புக்களின் நீள, அகலங்கள் காமிரா லென்ஸையும், அதிக நேரம் நடப்பதாக காட்டப்படும் புணர்ச்சியின் நேரம் எடிட்டிங் மற்றும் பலவகையான காட்சிக் கோணங்களையும் சார்ந்திருக்கிறது... பிம்பங்களின் இந்த நுண்ணரசியல், பார்வையாளனின் பொது அரசியலை பெருமளவு கட்டமைக்கிறது.
பேசா பொருளை குறித்து நல்லதொரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி.
-/பெயரிலி. said...
//பயனுள்ள தொடராக அமையுமென்று நம்புகிறேன்.//
நன்றி. வாசிப்பிற்கும் புரிதலுக்கும்.
//இக்க்கட்டுரையின் இப்பகுதியின் பெரும்பாலான கருத்துகளுடனே ஒப்புதலுண்டெனினும், இக்கட்டுரை எண்பதுகளிலே எழுதப்பட்ட கட்டுரை போன்று உணர்வதினைத் தடுக்கமுடியவில்லை. நீங்கள் சுட்டும் மாஸ்ரர்ஸ் & ஜோன்ஸனின் ஆய்வு முடிவுகளிலே சில (உச்சநிலை(கள்) ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் எண்ணிக்கை, ஏற்றவிறக்கநிலை என்பன பற்றி) தொண்ணூறுகளின் ஆய்வுகள் சிலவற்றிலே தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதென்று ஒரு கட்டுரை சில ஆண்டுகளின் முன்னே வாசிக்கக்கிட்டியது.//
உங்கள் யூகம் சரியே. இக்கட்டுரை 85 களின் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு 93-ல் எழுதப்பட்டது சவுதியில் நண்பர்களின் தனிச்சுற்றுக்காக. அதன்பின் இதனை அனுப்பும்படி தோழர் அ. மார்க்ஸ் ஒரு முறைக் கேட்டார் நிறப்பிரிகையில் பிரசுரிக்க. பல தயக்கங்களால் அதனை வெளியட தரவில்லை. சமீபத்தில் பதிவுகளில் நண்பரான ஒருவர் இதனை படித்துவிட்டு வெளியிடுங்கள் ஒரு உரையாடலை முன்னெடுக்கலாம் என்றதால் பல தயக்கங்களுக்கும் நீண்ட யோசனைகளுக்கும் பிறகே இதனை வெளியிட்டேன். தற்போதைய கருத்தாக்கங்கள் நிறைய மாற்றத்திற் குள்ளாகிவிட்டன. குறிப்பாக பெண் பற்றிய கருத்தாக்கம் துவங்கி பெண்களின் பாலியலி்ல் G-spot வரை இன்று புதிய கருத்தாக்கங்கள் வந்துள்ளன. அவை விவாதத்திலும் உள்ளன. வேறு சில ஏற்றுக்கொண்ட பணிகளால் அவை எழுத்தாக முறைப்படுத்தப் படவில்லை. அதனை இத்தொடருக்குப்பிறகு முறைப்படுத்தி வெளியிடலாம். இத்தொடரை வெளியிடக் காரணம். இது சில ஆரம்ப நிலைப் புரிதல்களைத் தராலாம் என்பதால்தான். மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன் தம்பதியினரின் ஆய்வுகள் பாலியலை ஒரு நோயாக பாவித்து சிகிச்சை என்பதாக மீள் ஒழுங்கமைப்பு செய்தது ஒரு விமர்சனத்துக்குரிய ஆய்வுப்பள்ளியாகும்.
//1. உடல் அரசியல் ஆண்கள்-பெண்கள் என்ற கறுப்பு-வெள்ளை யிங்-யாங்கிற்கு அப்பாலே நகர்ந்து இருபாலியர், ஆண்-ஆண், பெண்-பெண், ஆணுடலுள்ளே பெண், பெண் உடலுள்ளே ஆண் என்ற பரிணாமத்துப்பரிமாணங்கள் விரிந்த நிலையிலும்,
2. ஆண் சந்தைக்கான நீலப்படங்கள் என்ற கட்டம் தாண்டிய நிலையிலும் (முழுமையாக அல்ல என்பதனை நிச்சயமாக ஒத்துக்கொள்ளவேண்டும்),
3. பெண்கள் தங்கள் உடல்களைக் குறித்த மொழியினையும் கட்டுப்பாட்டினையும் ஆட்சிப்படுத்துமளவு பெருகும் நேரத்திலும்
4. ஆணுடல் & பாலியல் குறித்த பெண்களின் ஆண் வழிப்படுத்தாத பார்வையும் கவனமும் கணிசமானவளவு வேர்விட்டிருக்கும் நேரத்திலும்
நீலப்படங்கள் குறித்த ஒரு தளப்பார்வை எத்துணை வெற்றியளிக்கும்?//
உடல் அரசியல் என்பது ஆண் பெண் என்கிற பாலினமாதல் துவங்கி இன்றைய பாசிசமயமமான மத, சாதிய, தேசிய, இன, நிற உடல்கள் வரை அனைத்தினது அரசியல் கட்டமைவுகளைளப் பற்றியும் பேசும் ஒரு துறைதான் என்பதே எனது புரிதல். இவ்வுரையாடலை இத்தளம் நோக்கி நகர்த்தி செல்வதே அவசியம். உண்மையில் இங்கு நீலப்படங்களை முன்வைத்துப் பேசப்படுகிறதே தவிர பதிவின் பல அம்சங்கள் அவற்றைத் தாண்டிச் செல்லக்கூடியவை என்றே கருதுகிறேன். இதனை வாசிக்கும் வாசகத் தளத்தில் உள்ள வேறுபாடுகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளைப்போல அல்லாமல் இங்கு இது குறித்து அறிமுகங்களே இல்லை எனும்போது மேலதிக உரையாடல் குறித்து சொல்ல வேண்டியதேயில்லை. நீலப்படங்களை பார்ப்பதே ஒரு பண்பாட்டுக் குற்றமாக உள்ள நிலையில் அப்படங்களை தரம் பிரித்து பார்ப்பதும் உள்வாங்குவதும் சிரமமான நிலையே. உங்களது கருத்துக்கள் அடுத்த தளத்திலானவை. இவை இந்த உரையாடலை மேலதிகப் புரிதலுக்க எடுத்துச் செல்லும். சரியான தருணத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
//பெண்களுக்கான ஆண்_ஆடையவிழ்ப்பு_நடனம்(!) தொடக்கம் பெண் மையப்படுத்தப்படும் நீலப்படங்களினாலே ஆண்களின் மீதான பெண்(நடிகை)களின் பிடி/வெற்றியேற்படுகின்றதென்று செவ்வி கொடுக்கும் நீலப்படநடிகைகள்வரை உதாரணம், கடந்த சில பத்தாண்டுகளாகப் பார்வைகள் விரிந்தோ வேறாகியோ எண்ணிக்கை பெருகியோவிருக்கின்றன என்று சுட்டலாம். //
உண்மைதான். சமீபத்தில் Pornography.A.Secret.History.Of.Civilisation. என்றொரு ஆவணப்படம் பார்த்தேன் அதில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அதில் சந்தை விதிகள் பற்றிய விவாதமும் உள்ளது. லாஸ் ஏன்ஜல்ஸில் உள்ள போர்ண் சிட்டி பற்றியும் பேசப்பட்டள்ளது. இப்பதிவில் அதனை நான் உள்ளடக்கவில்லை. இத்தொடருக்குப் பிறகோ இறுதியிலோ இந்த விவாதத்தை தொகுப்பாக்கி முழுமைப்படுத்தி தற்போதைய கருத்தாக்கங்களையும் உள்ளடக்கலாம். அத்துடன் Investigating Child Exploitation and Pornography என்று 2005-ல் வெளிவந்துள்ள ஒரு நூலில் இது குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. நூலாசிரியர்கள் அமேரிக்க அரசுத்துறையில் இத்துறைகள் குறித்து குற்றவியல் ஆய்வுத்துறையில் பணியாற்றியவர்.
அந்நூலில் - நீலப்படம் என்பது பழங்காலத்தில் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் துவங்கியது. 1839-க்குப்பிறகு நிழற்படம் (photography) மூலமாகவும், 1896-க்குப்பிறகு சலனப்படம் மூலமாகவும், 1976-க்குப்பிறகு VHS எனப்படும் ஒளிநாடாக்கள் மூலமாகவும் 1993-க்குப்பிறகு www எனப்படும் உலக வலைத்தள இணைப்புகளான இணையம் மூலமாகவும் 1997-க்குப்பிறகு AOL போன்றவற்றின் உரையாடி அறைகள் (chat rooms) மூலமாகவும், 2000-த்திற்குப் பிறகு விரைவான அகலப்பட்டை நேரடி இணையத் தொடர்புகள் (broaderband DSL Connections) மூலமாகவும் பண்முகமாகப் பரிணமித்துள்ளதை விவரிக்கிறது. இப்பதிவு 1993-ற்கு முந்தைய இணையமற்ற ஒரு சூழலில் இணையத்தின் பாதிப்புகளை உள்ளடக்காமல் எழுதப்பட்டது.
//அண்மையிலே பெண் என்பதனை வைத்து ஆணை வெல்லுதல் என்பதைப் பற்றி வெற்றிகரமான தொழிலதிபராகவிருந்த ஒரு பெண் எழுதிய புத்தகம் வேறு வந்திருக்கின்றது.//
புதிய தகவல்.
//நீலப்படங்கள் சரியென்றோ தேவையென்றோ நிறுவ நான் முயலவில்லை (சில அதீதமான உறவுநிலைநெறி பிறழ்த்தும் நீலப்படங்கள் தவிர்த்த மற்றைய நீலப்படங்களின் இருப்பு, பாலியலளவிலே சமூகவமைப்பிலே ஒடுக்கப்படும் தனியாளின் பாலியல்சார் உணர்வுநிலைக்கோளாறுகளைக் குறைக்க உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து). ஆனால், காமசூத்திராவைக் கொண்டாடுகிற, நான்கு மனைவிகளை அனுமதிக்கின்ற, காமத்தினைப் பாம்பாக்கி நச்சுநிலை சுட்டுகிற சமூகநெறிக்கோவைக்கு நீலப்படங்களின் "சுதந்திரம்" ஏதும் மேலான கெடுதலில்லை.//
எனது நிலையும் சரி தவறு என்கிற மதிப்பிடல் அல்ல. நீலப்படம் எனப்டும் பேர்ணோகிராபி பற்றி புரிந்து கொள்ள முயல்வதும் அதன் இயக்கத்தையும், போக்கையும் அறிந்து கொள்ள முயல்வதும் ஆகும். காமசாஸ்திரம் மற்றம் பிற மதப் பாலியல் ஒடுக்கமுறைக் குறித்து பிற்பகுதிகளில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட உரையாடலுக்கு மீண்டும் ஒரு நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
பைத்தியக்காரன் said...
//ஜமாலன், இந்தப் பகுதி, சிக்கலான ஒரு விஷயத்தை அரசியல், உளவியல், பொருளாதார காரணிகளுடன் உரையாடுகிறது.//
இன்னும்கூட இதனை முழுமையாக இப்பகுதி உரையாடவேண்டும். நமக்கான அய்வுகளும் தரவுகளும் எல்லைக்கட்பட்டதாக இருப்பதால் அதனை விரிவாகக் முடியவில்லை.
//உறுப்புக்களின் நீள, அகலங்கள் காமிரா லென்ஸையும், அதிக நேரம் நடப்பதாக காட்டப்படும் புணர்ச்சியின் நேரம் எடிட்டிங் மற்றும் பலவகையான காட்சிக் கோணங்களையும் சார்ந்திருக்கிறது... பிம்பங்களின் இந்த நுண்ணரசியல், பார்வையாளனின் பொது அரசியலை பெருமளவு கட்டமைக்கிறது.//
இந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதத்தில் உள்ளது. அதனை நுண்ணரசியல் தளத்திலும் அது கட்டமைக்கும் பொது அரசியல் தளத்திலும் மேலெடுத்தச் செல்லவேண்டும்.
//பேசா பொருளை குறித்து நல்லதொரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி.//
நன்றி.
/
//அண்மையிலே பெண் என்பதனை வைத்து ஆணை வெல்லுதல் என்பதைப் பற்றி வெற்றிகரமான தொழிலதிபராகவிருந்த ஒரு பெண் எழுதிய புத்தகம் வேறு வந்திருக்கின்றது.//
புதிய தகவல்.
/
Seducing the Boys Club
சுட்டிக்கு நன்றி -/பெயரிலி.
Post a Comment