"நீங்கள் என்பது உங்கள் உடல்கூட அல்ல, மனம்தான்"
-லிவங்ஸ்மைல் வித்யா
(http://livingsmile.blogspot.com/)
அற்புதமான வாசகம்। மிகவும் வலி நிரம்பிய இந்த உரையாடலில் ( உரையாடலுக்கு சொடுக்கவும் - http://photobala।blogspot।com/2007/08/blog-post_17.html) இந்த வரிகள் ஒரு படைப்பாளிக்கேயுரிய தெறிப்புகளாக வெளிப்படுகிறது। Transgender - களுக்கு என எத்தனையோ ஆங்கில இனணயதளங்கள் உரிமை கோரும் சங்கங்கள் உலக அளவில் இருந்தும்॥ இந்தியாவின் ஆன்மீகப் பெருமை என்கிற அர்த்தமற்ற மனிதவிரோத சிந்தனைகளும் பார்வைகளும் உடல் குறித்த மதங்களின் புணிதங்களுமே இன்றைய பொதுப்புத்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது। தினவாழ்விற்கான பொதுப்புத்தியை புரிந்துகொள்ள உடல்களை கட்டமைத்துள்ள உடல் அரசியல் குறித்த விழிப்புணர்வு அவசியம்।
முதலில் இதனை நமது உடல் குறி்த்த விழிப்புணர்விலிருந்தே துவங்க வேணடும்। நமது உடலும்கூட அரசியலாக்கப்பட்டுள்ளது॥ உடல் அரசியல் குறித்து எதிர்வரும் நாட்களில் தொகுக்கப்பட உள்ள இப்பதிவின்குறிப்புகளில் இவற்றை புரிந்து கொள்ளலாம்। உலகறியா சிறுவர்கள்கூட இன்றைய கருத்தியலின்படி வழி நடத்தப்படுவதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது। ஒரு மனித உடலிற்குள் வடிவமைக்கப்படும் தன்னிலை என்பது எப்படி பன்னெடுங்கால வரலாற்றைச் சுமந்துள்ளது என்பதும். எதையும் யாரும் சொல்லிக் கொடுக்காமலே சிறுவர்கள் புரிந்துகொள்வதற்கு திரைப்படம் மட்டுமல்ல நமது பண்பாட்டு விழுமியங்களுமே காரணமாக உள்ளது।
சகோதரி வித்யாவின் இவ்வுரையாடல் பலவிதமான அர்த்தங்களை இவ்வுலகு குறித்த புனைவுகளை தோலுரிக்கிறது। உரையாடி அதனை பதிவித்த நண்பர் பாலாவிற்கும் நன்றிகள்॥
அவசியம் ஒருமுறை அதனை படித்துப்பாருங்கள்। இவ்வாரத்திற்கான ஒரு உருப்படியான பதிவு அது... மிகவும் வலி நிறைந்த அந்த சொற்கள்... நெஞ்சில் உறைந்து பொய்விட்டது...
-ஜமாலன்।
Labels: பொது
Subscribe to:
Post Comments (Atom)







1 Comment:
மிகவும் வலி ததும்பும் பதிவு அது.திருநங்கைகளை ஒரு சக மனிதனாக மதிக்காமல் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் அனைவரும் இப்பதிவினைக் கட்டாயம் படிக்கவேண்டும்.
Post a Comment